சுற்றுலாப் பொருட்காட்சி திடல் !
கான்ஸ்டபிள் கன்னியப்பன ஐந்தா வது ஸ்டாலை நெருங்கும்போது கவனித்தார். குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது.நீல நிற அரைக்கை சட்டையும் கருப்பு
நிற டிரவுசரும் அணிந்திருந்தது. கால்களில் கருப்பு நிற ஷூ வும் வெள்ளை நிற சாக்ஸூம் காண ப்பட்டது. அதன் சிவந்த நிற உடலுக்கு எடுப்பாய் இருந்தது ! மூக்கும் முழியு மாய் துரு துருவென்ற தோற்றம் கண்டு மனம் விரிய அக்குழந்தை யின் அருகில் சென்றார் கன்னி யப்பன்.
" பாப்பா..நீ யாருப்பா..ஏன் அழுது க்கிட்டிருக்கே. என்ன வேணும் ?" கன்னினப்பனின் அன்பான வார்த் தைகளைக் கேட்டு அழுகையை நிறுத்திய குழந்தை அவரைஏற இறங்கப் பார்த்தது. பிறகு மீண்டும்
அழுதபடி , " அப்பாவைக் காணோம். எனக்கு அப்பா வேணும் !" என்றது.
கன்னியப்பனுக்குப் புரிந்தது. குழந்தை தன் அப்பாவைத் தவற விட்டுவிட்டது. இதை இப்படியே விட்டுச்செல்வது ஆபத்து ! யாரா
வது குழந்தையைக் கடத்திச் சென்று விடுவர். அதனால் நாம் கூட்டிச் சென்று விசாரித்து குழந்தையை உரியவரிடம் சேர்ப்போம் என நினை த்தார். அங்கேயே சில நிமிடங்கள் காத்திருந்தார். யாரும் வரவில்லை. அதோடு குழந்தை நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்தது !குழந்தை யின் அருகே குனிந்தபடி, " தம்பி,
என்னோட வர்றயா. உங்கப்பாவத் தேடி கண்டுபிடிக்கலாம்.." என்றதும், குழந்தை அழுகையை நிறுத்தி தன் கண்களைத் துடைத்துக் கொண்டது. பிறகு ஆமோதிப்பு முகமாக கன்னி யப்பனின் வலது கையை தன் இடது கையால் பற்றி நடக்கத் தொடங்கி யது !
குழந்தைப் பேறே இல்லாத கன்னி யப்பன் ஒரு அழகான குழந்தை தன் கரம் பற்றியதும் நெகிழ்ச்சியில் சிலிர்த்துக் கொண்டார். குழந்தைப் பேறு எவ்வளவு சுகமானது என்பதை உணர்ந்தகொண்டவர் கண்களில் நீர் கசிந்தது ! போலீஸ் பூத்தினுள் குழந் தையுடன் உள்ளே நுழைந்த கான்ஸ் டபிளை பார்த்த சப்இன்ஸ்பெக்டர் ,
" கன்னியப்பன்! யாருங்க இந்தக் குழந்தை ?"
" சார் ! குழந்தை யார்துன்னு தெரிய ல்ல.அஞ்சாம் நம்பர் ஸ்டால் வாசல்ல நின்னு அழுதுக்கிட்டிருந்தது. கேட்டுப் பார்த்தப்போ அப்பாவக் காணோம்னு சொன்னது. பேசாம இங்கக் கூட்டிக்கி ட்டு வந்தேன்."
" அப்படியா ! " என்றவர், குழந்தையை
அப்படியே இருகைகளாலும் அள்ளி
எடுத்து தனக்கு முன்னாலுள்ள மேஜையில் அமர வைத்தார்.குழந்தை தன் கண்களை சுழலவிட்டது. பிறகு மீண்டும் அழத் தொடங்கியது " அப்பா " என்று முனகியபடி !
" தம்பி ! உன் பேர் என்னப்பா ?"
அழுகையை ஒருகணம் நிறுத்தி ,
" அபிமன்யு " என சொல்லிவிட்டு மீண்டும் அழத் தொடங்கியது.
" சரி. உங்கப்பாவ கண்டுபிடி ச்சிடலாம். அழாதே. உன் அப்பா பேர் என்ன ?"
" கணேசன் "
" அம்மா ?"
" அது யாரு ?"
இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் ஓருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
' பாவம் அம்மா இல்லாத குழந்தை ! குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளாமல் அப்படி என்ன ஜோலி இதன் அப்பனுக்கு !' மனத் தில் நினைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.டிராயரைத் திறந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து இரண்டு பிஸ்கட் பீஸை எடுத்து குழந்தையிடம் நீட்ட, அது அழகையை நிறுத்தி அவற்றை வாங்கிக் கொண் டது.
குழந்தையைப் பற்றிய விளக்க ங்களைஒலிபெருக்கியில் அறிவிக்கச் சொன்னார் இன்ஸ்பெக்டர். ஐந்து நிமிடங்களுக்கு ஒருதரம் அறிவிப்பு விட்டு விட்டுத் தொடர்ந்தது.
பூத்திற்கு வெளியே நடமாடியவர் களை கூர்ந்து கவனித்தார். இவர் களில் யார் இந்தக் குழந்தைக்குத் தந்தை...குழந்தையும் இப்போது அழுகையை நிறுத்தி வெளியே பராக்கு பார்த்துக்கொண்டிருந்தது. அதனிடமும் எந்தவித ரியாக்ஷ
னும் இல்லை.
அப்போது நல்ல சிவப்பு நிறத்தில் ஷர்ட் பேண்ட் அணிந்திருந்த டிப்டா ப்பான ஆசாமி பூத்தினுள் நுழைந் தான். மூக்கும்முழியுமாய் காணப்பட்ட இவன்தான் இந்தக் குழந்தைக்கு தந்தை என நினைத்தார் இன்ஸ் பெக்டர். ஆனால் குழந்தை
அவனைப் பார்த்தும் எந்தவிதச் சலன
மும்மின்றி இருந்தது. வந்தவன் யாரோ தவறவிட்ட பர்ஸை பூத்தில் ஓப்படைத்துச் செல்ல சீ என்றானது இன்ஸ்பெக்டருக்கு.
சில நிமிடங்கள் கழிந்தன. அப்போது
உள்ளே நுழைந்தவனைப் பார்த்து" ஹை அப்பா ! " என்று ஒரே எட்டில் தாவி அவன் தோளில் ஏறிக் கொண் டது குழந்தை. அவன் கன்னங்கரே லென்று தெற்றுப்பல்லுடன் சகிக்க முடியாத தோற்றத்துடன் இருக்க இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் நம்ப முடியாமல் வாயடைத்துப் போய் நின்றிருந்தனர் !
........................................................................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
குழந்தை' என்கிற சிறு
கதை அனுப்பியுள்
ளேன் பரிசீலனைக்காக