ஆடுறான் மேடையேறி ஆடுறான்.. ஆடும்வரை
ஆசையோடு ஆடுறான்!
கூடுறான் கூட்டமாகக்
கூடுறான்.. கூத்துமேடை
முன்னாலே கூடுறான்!
ராஜா வேசம் கட்டியவன்
ஆடுறான்.. இறங்கிவந்து
காஜா பீடிக்கு ஏங்குறான்!
புத்தன் வேடம் போட்டு
இவன் நடிக்கிறான்..
பொறாமையில் பாவச்
சேற்றில் குளிக்குறான்!
பாசமிக்க உறவினன் போல் நடிக்கிறான்..
பச்சைரத்தம் அஞ்சாமல்
குடிக்குறான்!
நேசத்தோடு தோளில் கைகள் போடுறான்..
கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுறான்!
அன்பொழுக அருகில் நின்று உருகுறான்..
அகப்பட்டதை நைசாக
உருவுறான்!
அரிதாரம் போட்டு மேடை நடிக்கிறான்..
அரிதாரம் போடமலும்
இவன் நடிக்கிறான். !
கூத்துமேடை முடியும்
வரையில் ஆடுறான்..
விடிந்துவிட்டால்.. கூட்டம் கலைந்து ஓடுறான்!
எத்தனைநாள் தெரியாமல் நடிக்குறான்
எத்தனையோ வேடமிட்டு நடிக்குறான்!
ஆடும் வரை ஆடுகிற மேடைதான்.. அப்படியே சாய்ந்துவிட்டால்.. பாடைதான்.!
*வேகல்யாண்குமார்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?