அறுசீர் மண்டிலம்.
முடிந்தால் முடியாத
தில்லை
முயற்சி செய்தாலே
முடியும்!
இடுக்கண் வந்தாலே
கவலை
என்றும் பெற்றிடாதே
நீயும்!
அடுக்க டுக்காகத்
துன்பம்
ஆயி ரமாகத்தான்
வரினும்
முடுக்கி விட்டிடுவாய்
தீரம்
மேன்மை அதுதானே
வீரம்!
சுமையைச் சுமையாக
எண்ணிச்
சோர்ந்து போகாதே
கண்ணா!
கமழும் வேர்வையினைக்
கொடுத்துக்
காலம் போற்றிடவே
வாழி!
அமைந்த வாழ்வுக்கே
நன்றி
அழகாகச் சொல்லிடுவாய்
இன்றே!
இமைக்கும் காலமுந்தான்
உழைப்பாய்
இம்மை உலகத்தில்
சிறப்பாய்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%