கைபேசி ஒருவேளை இனி காதல் சின்னமாக கூட மாறலாம்...
கைபேசி.... முதலில் காதுகளை தொட்டு பிறகு இதயத்தை தொடும் காதல் தூதுவன் !
'ஹலோ ' என்கின்ற காதலியின் வார்த்தையே கவிதையாய் மாறியது கைபேசியில்....
காதலர்களின் கைப்பேசிக்கு ஓய்வு கிடையாது இரவும் பகலும்...காதலர்களுக்காக தன்னை தானே சார்ஜ் இறக்கி மாய்த்துக் கொள்ளும் பிறகு ஃபீனிக்ஸ் பறவையாய் சார்ஜை ஏற்றி புத்துயிர் பெற்று வருவதும் கைப்பேசி !
பலரது காதல் கைபேசியில் தொடங்கி ...கைபேசியிலேயே முடிவடைகிறது...
நட்பை காதலாக மாற்றுவதும், காதலை மோதலாக மாற்றுவதும் கைபேசி....
வாழவைக்கும் காதலுக்கு கைப்பேசியே நீயே துணை !
'
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?