கொடுங்கையூரில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரை விற்பனை: பீகார் மருந்துக்கடை அதிபர் கைது

கொடுங்கையூரில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரை விற்பனை: பீகார் மருந்துக்கடை அதிபர் கைது



கொடுங்கையூர் பகுதியில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை பீகாரில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்த வழக்கில் 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் பீகார் சென்று மருந்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர், கடந்த 19.11.2025 அன்று இரவு, கொடுங்கையூர், ஆர்.ஆர். நகர் பகுதியில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சில நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.


அதன்பேரில் கொடுங்கையூர் காவல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 1,800 எண்ணிக்கைகள் கொண்ட உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பீகார் மாநிலத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் பீகார் மாநிலம் விரைந்து சென்று அராரியா மாவட்டம், அராரியா டவுன் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மருந்துக்கடையில் இருந்து மாத்திரைகளை வாங்கி சென்றது தெரியவந்ததின்பேரில், உள்ளூர் காவலர்கள் உதவியுடன் விசாரணை செய்து மேற்படி எதிரிகளுக்கு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடை உரிமையளார் பெரோஸ் ரிஷா (46) என்பவரை கைது செய்து, அங்குள்ள சரக நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் சென்னைக்கு அழைத்து வந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%