கொடைக்கானல் டோல்கேட் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி
Jan 05 2026
14
கொடைக்கானல், ஜன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது இது சுற்றுலாத்தளத்தில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகில் நகராட்சி கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகின்றது எங்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதோடு நாள்தோறும் அரசு பேருந்து தனியார் பேருந்து மற்றும் உள்ளூர் வாகனங்கள் என பல்வேறு வாகனங்களும் வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கம் மலைப்பிரதேச காய்கறிகள் மற்றும் மலையில் விளையக்கூடிய மரங்கள் உள்ளிட்டவைகளை வெளி ஊர்களுக்கு மலையிலிருந்து கொண்டு செல்வது தினசரி வாகனங்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது கொடைக்கானலை பொருத்தவரை மேல்மலையான்மலை நகர் பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை அன்றாடும் மதுரை திண்டுக்கல் தேனி திருச்சி பழனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விளைவிக்கக்கூடிய காய்கறிகளை எடுத்துச் சொல்வது விவசாயிகளில் அன்றாட நிலையாக உள்ளது அதேபோன்று வனத்துறை பகுதியிலும் தனியார் தோட்டங்களிலும் வெட்டப்படும் மரங்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது திடீரென கட்டண உயர்வு ஏற்படுத்தி கீழ்கண்டவாறு கட்டணங்களை நிர்ணயம் செய்து உள்ளது கொடைக்கானல் நகராட்சி கார்களுக்கு ரூ.60லிருந்து ரூ.80 ஆகவும், வேன்களுக்கு 80 ரூபாயிலிருந்து ரூ.100 ஆகவும், பேருந்துகளுக்கு ரூ.250 இருந்த சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் ரூ.300 ஆக உயர்வு.
உள்ளூர் வாகன எண்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தால் நுழைவு கட்டணம் ரத்து; இக்கட்டணத்தின் உயர்வால் பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பதோடு கட்டண உயர்வு குறித்து எவ்விதமான முன்னறிவிப்பு இல்லை என்பதனை பொதுமக்களும் உள்ளூர் வாசிகளும் புலம்புகின்றார்கள் அதேபோன்று தினசரி வந்து செல்லக்கூடிய அரசு பேருந்து தனியார் பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது முறையான தகவல்களை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அல்லது வணிக நிறுவனத்தின் அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கோ செய்தியாளர்களுக்கு கூறவில்லை என்பது ம். குறிப்பிடத்தக்கது. ஆனால்3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு என்ற தகவலை முறையாக பொதுமக்களுக்கு வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை என்பது துறை தகவல்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?