கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி - அமெரிக்கா அறிவிப்பு
Dec 05 2025
27
நியூயார்க்,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் (50 ஆயிரம் டாலர்கள்) வெகுமதி அளிப்பதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி
லாகூர்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?