கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி ஐ.டி. ஊழியர் படுகாயம்

கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி ஐ.டி. ஊழியர் படுகாயம்


 

கோத்தகிரி: நீல​கிரி மாவட்​டம் கோத்தகிரியில் செயல்​படும் தனி​யார் பள்​ளி​யில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்​பவர் இரவு நேரக் காவலா​ளி​யாக பணிபுரிந்து வருகிறார்.


இவரது மகன் பகதூர் (25) பெங்​களூரு​வில் உள்ள தகவல் தொழில் ​நுட்ப (ஐ.டி.) நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், விடு​முறைக்​காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்​தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்​றார். சில மணி நேரங்​கள் கழித்து நாய் மட்​டும் வீடு திரும்​பியது.


இதனால் அதிர்ச்​சி​யடைந்த உறவினர்​கள் பகதூரைத் தேடினர். பள்ளி வளாகத்​தில் படு​கா​யங்​களு​டன் கிடந்த பகதூரை மீட்​டு, கோத்தகிரி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.


தகவலறிந்து வந்த வனத் துறை​யினர் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், பள்ளி வளாகத்​தில் உலா வந்த சிறுத்தை, பகதூரின் வளர்ப்பு நாயை வேட்​டை​யாட முயன்​றதும், அதைக் காப்​பாற்ற முயன்ற பகதூரைத் தாக்​கியதும் தெரிய​வந்​தது.


முதலுதவி சிகிச்​சைக்​குப் பின்​னர் ஊட்டி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் மேல்​சிகிச்​சைக்​காக பகதூர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%