கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு
Jan 31 2026
28
சென்னை, ஜன. –
ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு மருத்துவர்களுக்குக் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன்படி, ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3,000 ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலர் ஆகியோர் மருத்துவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான வாக்குறுதிகள் அளிக்கப்படாததால், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
இன்று காலை உண்ணாவிரதம் நிறைவடைந்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது. அடுத்த ஒரு வார காலத்துக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தப் போவதில்லை. அரசு சார்ந்த முக்கியக் கூட்டங்கள் மற்றும் அலுவல் ரீதியான வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து மருத்துவர்கள் வெளியேறித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள். இந்த ஒரு வார போராட்டத்துக்குப் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில், மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?