கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
Oct 25 2025
92
விழுப்புரம், அக். 26-
விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் கிழக்கு பாண்டி ரோட்டில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பெரும்பாலும் மூலவர் கிழக்கு நோக்கியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆனால் கோலியனூரில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் பூமிநாயகி நீளா நாயகி சமேதரராக மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். வரும் நவம்பர் 3ம் தேதி காலை 9 மணிக்கு பாலாலயம் நடைபெறுகிறது. இதனால் அன்றிலிருந்து மூலவருக்கு தினசரி பக்தர்கள் தரிசனம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நித்தியபடி சேவை மட்டும் இடைவிடாது நடைபெறும். சனிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து சர்வ அலங்காரத்தில் பூமிநாயகி நீளா நாயகி சமேதரராக எழுந்தருளி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அர்ச்சகர் ஸ்ரீ ராஜகோபால் விமரிசையாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?