news Breaking News
clock

சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்ப முன்கூட்டியே மருத்துவ தேர்வுகள்

சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்ப முன்கூட்டியே மருத்துவ தேர்வுகள்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி கடைசி வாரத்தில் முடிவடையும். இந்த நிலையில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தி லேயே இந்த தேர்வுகள் தொடங்கி, மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் வகையில் அட்டவணை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு மாதம் முன்கூட்டியே தேர்வு அட்ட வணை தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அதன்படி மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி கடைசி வாரத்திற்குள்ளாக ஒட்டுமொத்த தேர்வுகளும் முடிவடைய இருக்கின்றன. தமிழகத்தில் சுமார் 50 மருத்துவக் கல்லூரிகளில் 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கி நிறைவடைய இருக்கிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News