சட்டம் பயிலும் இளம் மாணவர்களுக்கு வழிகட்டும் பயிலரங்கம்: ஐகோர்ட் நீதிபதி அருள்மொழி வாழ்த்து

சட்டம் பயிலும் இளம் மாணவர்களுக்கு வழிகட்டும் பயிலரங்கம்: ஐகோர்ட் நீதிபதி அருள்மொழி வாழ்த்து

சென்னை, ஆக 12–


டாக்டர் மீனா முத்தையாவின் வழிகாட்டுதலில் செட்டிநாடு பள்ளியின் 10வது ஆண்டு நீதிமை நிகழ்வுகளைக் கொண்டாடும் ‘‘லெஜிஸ் ஃபெஸ்டீஸ்’’ தொடங்கியது.


பள்ளியின் முதல்வர் அமுதஷ்மி, துணை முதல்வர் ஜேம்ஸ் ஆல்வின் ஆகியோர் பேசினர்.


ஐகோர்ட் நீதிபதி அருள்மொழி உரையில், ‘மேன்மை வாய்ந்த சமூகத்தை வடிவமைப்பதில், சட்டத்தின் பங்கு அளப்பறியது’. சட்டங்களால் வடிவமைக்கப்பெற்ற இத்துறையில் தன்னலமின்றி உழைக்கவும் நீதியை நிலைநாட்டவும் மாணவர்கள் பணியாற்ற வேண்டும்’ ‘சமத்துவ நடுநிலை சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும்’என்றார்.


இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்த எம். ராஜாராம் உரையில், நற்பண்புகளுடன் செயலாற்றி நீதியை நிலைநிறுத்த, சட்டம் என்ற சாட்டையை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும்’ என்றார்.


இவ்விழா பல்வேறு போட்டிகள் மற்றும் விவாதங்களைக் கொண்டது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைந்தது.


இக்குழுவின் தலைவர் ராகவிகா வாசன், துணைத் தலைவர் எஸ்.ஆர். நிதர்சனா மாணவர்களின் செயல்திறமைகளை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வு சட்டம் பயிலும் இளம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%