news Breaking News
clock

சத்தீஷ்கார் என்கவுன்டர்: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் என்கவுன்டர்: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்,


சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.


இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் நாராயன்பூர் மாவட்டத்தின் அபூஜ்மேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று மதியம் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.


அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News