சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு: உங்க தட்டில் இதெல்லாம் இருக்கா? உடனே கவனியுங்கள்!

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு: உங்க தட்டில் இதெல்லாம் இருக்கா? உடனே கவனியுங்கள்!


 

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான உணவு பழக்கவழக்கம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பயறு வகைகள் போன்ற இயற்கை உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் தேவையான நார்ச்சத்தை பெறலாம்.


இந்நிலையில், எந்த உணவுகளை எவ்வளவு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் குறித்த தகவல்களை இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.


நன்மை பயக்கும் பழங்கள்:


ஆப்பிள் - நார்ச்சத்து மிகுதியானது.


ஆரஞ்சு - வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.


பேரிக்காய் - நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் கொண்டது.


பப்பாளி - குறைந்த க்ளைசெமிக் குறியீடு உடையது மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.


தர்ப்பூசணி - குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்டது.


மாதுளை - ஆக்சிஜனேற்றத் தடுப்புப் பொருட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.


கொய்யா - வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது.


திராட்சை - ஆக்சிஜனேற்றச் சத்து கொண்டது என்பதால் மிதமான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.


நெல்லிக்காய் - அதிக வைட்டமின் சி கொண்டது.


நுங்கு - வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து வழங்கும் இயற்கை உணவாகும்.


இந்த பழங்களைச் சாறாகக் குடிக்காமல் முழுப் பழமாக உண்பதே சிறந்தது.


 அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள்:


கீரை - 1 கப் சமைத்த கீரையில் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது.


புடலங்காய் - 1 கப் சமைத்த புடலங்காயில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது.


சுரைக்காய் - 1 கப் சமைத்த சுரைக்காயில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது.


முள்ளங்கி - 1 கப் சமைத்த முள்ளங்கியில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது.


கோவைக்காய் - 1 கப் சமைத்த கோவைக்காயில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது.


பீன்ஸ் - 1 கப் சமைத்த பீன்ஸில் 9 கிராம் நார்ச்சத்து உள்ளது.


கத்திரிக்காய் - 1 கப் சமைத்த கத்திரிக்காயில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது.


காலிஃபிளவர் - 1 கப் சமைத்த காலிஃபிளவரில் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.


தானியங்களில் கேழ்வரகு, தினை, சோளம், பார்லி மற்றும் ஓட்ஸ் நல்ல நார்ச்சத்து வழங்குகின்றன.


பயறுகளில் கொள்ளு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு மற்றும் காராமணி சிறந்த ஆதாரங்களாக உள்ளன.


சர்க்கரை நோயாளிகளுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவு நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும், பொதுவாக ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அளவை பெற பழங்களுடன் தினமும் 2 முதல் 3 வகை காய்கறிகள், 2 முதல் 3 வகை தானியங்கள் மற்றும் 1 முதல் 2 வகை பயறுகளை உணவில் சேர்க்க வேண்டும்.


 மேலே குறிப்பிடப்பட்டுள்ள நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கின்றன. இவற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை சமநிலைப்படுத்தவும், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%