சர்வதேச சுற்றுலா தலமாக உருவாகும் மதுரை, காஞ்சி நகரங்கள்!

சர்வதேச சுற்றுலா தலமாக உருவாகும் மதுரை, காஞ்சி நகரங்கள்!


 

புதுடெல்லி: வரும் 2026- 27ம் நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மக்​களவை​யில் நேற்று முன்​தினம் தாக்​கல் செய்​தார். இதில் கோயில் நகரங்​கள், இரண்​டாம், மூன்​றாம் நிலை நகரங்​களின் வளர்ச்​சிக்​காக ரூ.5,000 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உள்​ளது.


இந்த திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 50 ஆன்​மிக நகரங்​கள் சர்​வ​தேச சுற்​றுலா மையங்​களாக உரு​வாக்​கப்பட உள்​ளன. வடக்கு பிராந்​தி​யத்​தில், உத்தர பிரதேசத்​தின் வாராணசி, மது​ரா, உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் ரிஷிகேஷ், ஹரித்​வார் மற்​றும் ஜம்மு காஷ்மீரின் முக்​கிய ஆன்​மிக சுற்​றுலா தலங்​கள் சர்​வ​தேச சுற்​றுலா தலங்​களாக உரு​வாக்​கப்பட உள்​ளன.


தெற்கு பிராந்​தி​யத்​தில் தமிழகத்​தின் கோயில் நகரங்​களாக அழைக்​கப்​படும் மதுரை, காஞ்​சிபுரம் ஆகியவை சர்​வ​தேச சுற்றுலா தலங்​களாக மாற்​றப்பட உள்​ளன. ஆந்​தி​ரா​வின் புகழ்​பெற்ற ஆன்​மிகத் தலமான திருப்​ப​தி, யுனெஸ்​கோ​வின் உலக பராம்​பரிய சின்​னம் அங்​கீ​காரம் பெற்ற கர்​நாட​கா​வின் ஹம்பி ஆகிய​வை​யும் சர்​வ​தேச சுற்​றுலா தலங்​களாக உரு​வாக்​கப்பட உள்​ளன.


மேலும் ஒடி​சா​வில் புரி, மேற்​கு​வங்​கத்​தில் விஷ்ணுபூர், மத்​திய பிரதேசத்​தில் உஜ்ஜைனி, கஜு​ராஹோ, குஜ​ராத்​தில் துவார​கா, மகா​ராஷ்டி​ரா​வில் பந்​தர்​பூர் ஆகிய ஆன்​மிக நகரங்​களும் சர்​வ​தேச சுற்​றுலா தலங்​களாக மாற்​றப்பட உள்​ளன.


அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், அசாம், மணிப்​பூர், மிசோரம் ஆகிய மாநிலங்​களில் உள்ள புத்த வழிப்​பாட்​டுத் தலங்​களில் சர்வதேச தரத்​துக்கு இணை​யாக உள்​கட்​டமைப்பு வசதி​கள் மேற்கொள்​ளப்பட உள்​ளன. மேலும் தமிழகத்​தின் ஆதிச்​சநல்​லூர் உட்பட நாடு முழு​வதும் 15 அகழ்​வா​ராய்ச்சி தலங்​கள் சர்​வ​தேச சுற்​றுலா தலங்​களாக மேம்​படுத்​தப்பட உள்​ளன.


சமீபத்​திய புள்​ளி​விவரங்​களின்​படி ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ஒரு கோடிக்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு சுற்​றுலா பயணி​கள் இந்தியா​வுக்கு வருகை தரு​கின்​றனர். புதிய திட்​டங்​கள் மூலம் இந்த எண்​ணிக்​கையை 10 கோடி​யாக அதி​கரிக்க இலக்கு நிர்ணயிக்​கப்​பட்டு உள்​ளது.


சுற்​றுலா துறை மூலம் மத்​திய அரசுக்கு ஆண்​டுக்கு ரூ.43.25 லட்சம் கோடி வரு​வாய் கிடைக்​கிறது. இந்த துறை​யின் மூலம் 6.3 கோடி பேர் வேலை​வாய்ப்​பும் பெற்​றுள்​ளனர். இதை கருத்​தில் கொண்டு மத்​திய பட்​ஜெட்​டில் சுற்​றுலா துறை மேம்​பாட்​டுக்கு ரூ.2,438.40 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு உள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%