கொட்டாங்குச்சியில் தண்ணி நிரப்பி.. மொட்டைமாடியில் வைப்பீகளா?
குடிக்கத் தாகம் எடுத்த எனது தாகத்தையே தீர்ப்பீங்களா?
சிட்டுக்குருவி இனத்தைக்காக்க சிறிது இரக்கம் வைப்பீகளா?
செல்லுப் போனு டவரை எல்லாம் கடலுக்கடியில் வைப்பீகளா?
குருவிக்கட்டும் கூடுகளை சிதையாமலே காப்பீகளா?
குடும்பத்திலே ஒருவராக எங்களையும் நினைப்பீகளா?
அழிந்துவரும் இனத்தைக்காக்க அன்பின் கதவை திறப்பீகளா..
ஆயிரமாய் பெருகி வாழ இதயவானில் பறப்பீகளா?
வே.கல்யாணகுமார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%