
தடுக்கி விழுந்த இடமெல்லாம்.. தட்டுப்படுகின்ற பதாகைகள்!
பிறக்கயிலே பெயர் வைத்தார் அந்தக் காலம்!
பிறந்த குழந்தைக்கும் பதாகைகள்
இந்தக்காலம்!
முக்கத்தில் முனையினிலே.. முச்சந்தி எங்குமே.. பெண்களையே வெக்கத்தில் சிரிப்பதுபோல் வைத்தாரே பதாகைகள்!
பூப்பெய்தி விட்டாலும் பதாகைகள்.. புதிதாக புகுமனை புகுவதற்கும் பதாகைகள்!
தீக்குண்டம் இறங்குகிற திரவ்பதிக்கும்.. திருவிழாவுக்கும்.. வாக்குவாங்க வந்தவர்க்கும்.. பதாகைகள்!
தாலிகட்டி கொண்டாலும் பதாகைகள்.. தடுக்கிவிழுந்தாலும் இங்கே பதாகைகள்!
போய்சேர்ந்த சேதி சொல்லப் பதாகைகள்!
பொழுதானால் புதிதாகப் பதாகைகள்!
கஞ்சனை வள்ளல் என்றும்.. கடைந்தெடுத்த திருடனைத் தியாகியென்றும்! பஞ்சமே இல்லா சொல்லால் பகருமே பதாகைகள்!
நல்லதோர் பாதைதந்த
நம்மறை திருக்குறளை
சொல்லிலே அடங்கா
சொற்றமிழ் பண்புதனை
பதாகையாய் வைப்பதற்கு பாரிலே யாருமில்லை!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?