நம்பிக்கையில் நான்

நம்பிக்கையில் நான்


என்னோடு நீ பேச வேண்டாம்…

பேசுவாய் என்ற நம்பிக்கை போதும்.


என்னை நீ சந்திக்கவே வேண்டாம்…

சந்திக்க அனுமதி கேட்டால் மறுக்க மாட்டாய் என்பதே போதும்.


நாம் என்றும் சேரவே மாட்டோம் எனக்கு தெரியும்.

ஆனால் சேர்ந்தே இருக்கிறோம் —

ஒரே காற்றை சுவாசிக்கிறோம், ஒரே பூமியில் வாழ்கிறோம்.


இது எல்லாவற்றையும் விட —

நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.


மாலை நேர இளம் காற்றில், கடற்கரை சாலையில்,

லேசான மழை சாரலில், யாரோ யாரோடு பேசுகையில்,

என் பெயரை யாரோ அழைக்கையில் —

நீ என்னை கண்டிப்பாக நினைப்பாய்…


இது நம்பிக்கை இல்லை — நீ என்னருகே இல்லாத போதும்

உன் இருப்பை உணர்த்தும் நிதர்சனம்.

---

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%