சிரித்து சிந்தியுங்கள்

சிரித்து   சிந்தியுங்கள்

சில டாக்டருக்கும் 

சில ஆக்டருக்கும்

உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

---------------------------------------------

சிவகாசிக்கும்

நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

---------------------------------------------

FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.

PILES க்கு பார்த்து உட்காரணும்.

---------------------------------------------

செல்போனுக்கும்

மனிதனுக்கும் என்ன

வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

---------------------------------------------

ஓவ்வொரு இளைஞனின்

மன உளைச்சலுக்கும்

காரணம்?

மதிப்பெண்ணும்

மதிக்காத பெண்ணும்!

---------------------------------------------

வசதி இல்லாதவன்

ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

---------------------------------------------

ஆண்களை

அதிக தூரம் நடக்க வைக்கும்

விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

---------------------------------------------

கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

---------------------------------------------

சிரித்து 

சிந்தியுங்கள்

இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்......☺️

லால்குடி வெ நாராயணன்* 

SBIOA UNITY ENCLAVE MAMBAKKAM CHENNAI 600127

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%