சூரபத்மன் அரக்கனை வதம் செய்ததாக புராணங்களில் வரும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
சூரபத்மன் என்பவன் மனிதனின் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மற்றும் ஆணவத்தின் உருவமாகும். இப்படிப்பட்ட தீய குணங்களை வென்று ஆன்மிக நல்வாழ்வு பெறுவதே சூரசம்ஹாரமாகும்.
ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு கந்த ஷஷ்டி என்று விமரிசையாக கோவில்களில் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.
முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து கந்தனை வழிபடுவார்கள். ஆறுநாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் குறிப்பாக உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் திருச்செந்தூரில் திரண்டு வந்து கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இது கந்த சஷ்டி விரதத்தின் உச்சமாகும். முருகப்பெருமானை வேண்டி இருக்கும் விரதமாகும்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான
போராகும். முருகப்பெருமான் சூரபத்மனை வென்றதாக புராணக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முக்கியமாக முருகப்பெருமான் தன் தாயார் பார்வதியிடம் வேலினைப் பெற்றுக்கொண்டு சூரபத்மனை வதம் செய்து வெல்வார்.
இந்த சூரபத்மன் யார்? காசியப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவன். சிவபெருமானை நோக்கித் தவமிருந்து பெண்ணால் பிறக்காத ஒரு குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். இதனால் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தினான்.
சிவபெருமான் நெற்றியிலிருந்து தோன்றிய நெருப்பை, வாயுபகவான் சரவணப்பொய்கையில் சேர்த்துவிட்டார்.
அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்கள் கையில் வளர்ந்தனர்.
பார்வதி தாயார் ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைக்க ஒருமுகமாக சண்முகனாக ஆனார்கள். பிறகுதான் பார்வதி தாயாரிடம் வேல் பெற்று சூரபத்மனை போரில் அழித்தான்.
இந்தப்போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தார்கள்.
முருகப்பெருமான் ஆறுமுகன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய
என்று பெருமையாக ஆறுமுகனது அவதாரத்தை கூறுகிறது கந்தபுராணம்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆறு நாட்களும் நடக்கும் ஒரு அற்புதமான நிகழ்வாகும்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?