news Breaking News
clock

சென்னையில் திருத்தணி முருகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 25 கோடி ஆக்கிரமிப்பு வணிகக் கட்டிடம், குடியிருப்புகள் மீட்பு

சென்னையில் திருத்தணி முருகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 25 கோடி ஆக்கிரமிப்பு வணிகக் கட்டிடம், குடியிருப்புகள் மீட்பு


இந்து சமய அறநிலையத்துறை துரித நடவடிக்கையால் ரூ. 25 கோடி மதிப்பிலான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளன.


அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வசந்த உற்சவ கட்டளை மற்றும் அகண்ட கட்டளைக்கு சொந்தமாக சென்னை தங்கசாலை பகுதியில் 9,575 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.


இக்கட்டிடங்கள் அமைந்துள்ள சுப்புசெட்டித் தெருவில் ஈ.கே.பிரசாத் மற்றும் 3 நபர்கள், தியாகராய பிள்ளை தெருவில் ஏ.ஆர், ராமச்சந்திரன் மற்றும் 4 நபர்கள், தங்கச் சாலையில் வள்ளியம்மாள் மற்றும் 8 நபர்கள் என மொத்தம் 18 நபர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர். இது தொடர்பாக வேலூர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் சட்டப்பிரிவு 78(1)-ன் கீழ் ஆக்கிரமிப்புதார்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நேற்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் க.ரமணி, திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தி அனிதா, சென்னை-–1 உதவி ஆணையர் க. சிவகுமார், திருத்தணி கோயில் உதவி ஆணையர் க.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் உதவி ஆணையர் மு.சிவஞானத்தால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் துணையுடன் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு சொத்துகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.


இந்நிகழ்வின் போது, தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) பாலாஜி, சிறப்பு பணி செயல் அலுவலர்கள் மாதவன், ரகாஷ், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News