சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டி சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. ரூ.13.40 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்தத் தொடர் வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க நாளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பா 11-3, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அனிகா துபேவை தோற்கடித்தார். ஜோஷ்னா தனது அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்தின் எல்லா ஜேன் லாஷுடன் மோதுகிறார்.
தேசிய சாம்பியன்களான வேலவன் செந்தில் குமார், அனஹத் சிங் ஆகியோருக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப் பட்டது. இதனால் அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் மோத உள்ளனர்.
யு 23 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன்
மும்பை: ஆடவருக்கான யு-23 மாநில ‘ஏ’ ஒன்டே டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
எஸ்.ஆர்.ஆதிஷ் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். முகமது அலி 57, மானவ் பராக் 57, பூபதி வைஷ்ஷ குமார் 37, ஆர்.கே.ஜெயந்த் 32 ரன்கள் சேர்த்தனர். உத்தர பிரதேச அணி தரப்பில் பிரசாந்த் வீர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 298 ரன்கள் இலக்குடன் பேட் செய்த உத்தரபிரதேசம் அணி 47.5 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக பிரசாந்த் வீர் 65 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார். சமீர் ரிஸ்வி 41 ரன்கள் சேர்த்தார். தமிழக அணி சார்பில் முகமது அலி 46 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?