செயற்கை நுண்ணறிவு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’ - டாடா குழும தலைவர்

செயற்கை நுண்ணறிவு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’ - டாடா குழும தலைவர்



புதுடெல்லி,


டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 20 நாடுகளின் தலைவர்கள், 60 மந்திரிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசாங்க பிரதிநிதிகள் நேற்று டெல்லிக்கு வந்தனர்.


அதேபோல் தொழில் அதிபர்கள், பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் வந்துள்ளனர். மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிலையில் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் இன்று செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்தபோது கூறியதாவது;-


“செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கு பல வழிகளில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதற்கு நாம் தயாராக இருக்கிறோம். சிப்களில் முதலீடுகள், பசுமை எரிசக்தியில் முதலீடுகள் மற்றும் ஏ.ஐ. மிஷன் என பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நான் பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன்.


செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு துறைக்கு மட்டுமானதல்ல. அதன் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் பல துறைகளுக்கு பரவி, அதை ஒரு மாற்றும் சக்தியாக மாற்றுகிறது. ஏ.ஐ. என்பது ஒரு பரிமாணம் அல்ல, அது பல பரிமாணம் கொண்டது.”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%