செய்யாறில் அ.தி.மு.க. சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் !

செய்யாறில் அ.தி.மு.க. சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் !


செய்யாறு, பிப். 8 -

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரக் கழகம் அ.தி.மு.க., சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் செய்யாறு நகர செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் நடந்தது. 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கழக பேச்சாளர் புதூர் மணி அ.தி.மு.க.வின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கிப் பேசினார். 

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் திமுக அரசு நிறுத்திவிட்டது. 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக்க வேண்டும் எனறு பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.


இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வெங்கடேசன், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருணகிரி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளையராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%