நீ எழுதி எழுதி என்ன சாதித்தாய் என்றார்கள் பலர் !
என் உணர்வுகளை எழுத்துருவில் வெளிப்படுத்தியதால் மனதில் நிம்மதி அடைந்தேன் என்றேன் நான் !
என்ன சம்பாதித்தாய் என்றார்கள் !
நட்பும், சுற்றமும் என்னை வாழ்த்துவதே என் சம்பாத்தியம் என்றேன் !
எத்தனை சொத்து சேர்த்தாய் என்றார்கள் !
என் குடும்பம் வாழ உழைக்கின்றேன் அதுவே போதும் என்றேன் !
இதோ இக்காணும் அடுக்குமாடி குடியிருப்பும், இந் நிலமும், உயர்ரக வாகனம் அனைத்தும் என் சொந்தம் ,ஏழேழு பரம்பரைக்கும் எனக்கு சொத்து இருக்கிறது என்றார்கள் !
நான் சிரித்தேன் !
அது உம் சொத்தல்ல உம் பரம்பரையால் உமக்கு வந்த சொத்து !
உமக்காக சொத்தை ஈட்டியவர்களும் மண்ணில் மாய்த்து விட்டார்கள் !
இது என் சொந்தம் என்ற நீங்களும், நானும் இந்த சிறு கைப்பிடி அளவு மண்ணுக்குதானே சொந்தமாகப் போகிறோம் !
வாழும் சிறு வாழ்க்கையில் ஏதேனும் படைத்து விட்டுப் போவதில் நான் நிம்மதி ! காண்கிறேன் எனக்கு அந்த சொத்தே போதும் என்றேன் !
--------------------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?