கடற்கரை ஓரம் காலை புன்னகை சிந்தும்.
அலைகள் கவிதை சொல்லி கரையைத் தொட்டுத் தொட்டு செல்லும்.
மணல் மேல் சூரியன் தங்கச் சித்திரம் வரைந்து,
காற்று மென்மையாக காதில் ரகசியம் கூறும்.
மாலை நேரம் காதல் ஜோடிகள் ஆங்காங்கே மேற்கொள்ளும் நடைப் பிரவாகத்தைக் காணலாம்.
நீல வானம் கடலோடு கலந்து கனவும்,
பறவைகளும் சுதந்திரப் பாடல் பாடிப் பறக்கும்.
அலை ஒலி மனசின் சுமையைத் துடைத்தெறியும்.
நினைவுகள் மணலில் தடங்களாய் பதியும்.
மாலைச் சூரியன் செம்மஞ்சள் போர்வை போர்த்தும்,
அழகே அலாதியானது.
கடற்கரையின் சுற்றுச்சூழல் பேரின்பம் தரும்.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
கோயம்புத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%