திருநள்ளாறு சனி!

திருநள்ளாறு சனி!



என்னை பிடிக்காத ஒருவர்

எரிச்சலுடன் என்னை திட்டினார்

திருநள்ளாறு சனியேயென்று

எனக்கு கோபமாக வந்தது

நான் அதுவரை பார்த்ததில்லை

திருநள்ளாறு சனியை

அந்த சனி எப்படியிருக்கும்

பார்க்கவே பயங்கரமாக

இருக்குமோயென்று மனதில்

ஏக குழப்பம் வருத்தம்

பார்த்தே ஆகவேண்டும்

அந்த பொல்லாத

சனியையென்று புறப்பட்டேன்

காரைக்கால் திருநள்ளாறு

பார்த்தேன் அந்த திருநள்ளாறு சனியை

சாந்தமுகத்துடன் காக்கை வாகனனாக

காட்சியளித்தார் அவர்

அவரைப்பார்த்த அடுத்த வினாடியே

என்னை திட்டிய அந்த எதிரி

எனக்கு நண்பனாக தெரிந்தார்!



-சின்னஞ்சிறுகோபு,

  சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%