தொடர்ந்த
நாளின் பெரும்பகுதியை
செய்தொழிலின்
அழுத்தப்பணிகள்
ஆக்கிரமிக்கும் போது
நாளை விடுமுறையாய்
இருக்ககூடாதா
செயலுக்கு பின்
முடிவு சாதகமாக
இருக்காது என்று
தெரிந்த பின்
காத்திருப்பு காலங்களில்
ஏதாவது அதிசயம்
நடக்காதா
வாக்குவாதம்
உச்சம் தொடங்குகையில்
உறவும்
நட்பும்
பகைமையாகும் முன்
வேறு நிகழ்வுகள்
நடந்து முற்றுப்பெறாதா
புரிந்து கொள்ள வேண்டிய
செய்ய வேண்டியவை
பற்றி நீள விளக்கங்கள்
கொடுக்கையில்
கேட்பவர்
கவனகுவிப்பும்
சிந்தனை சிதறல்
இல்லாமால் இருப்பரா
என எண்ணுவது
மனித மனங்கள்
சொல்வது எல்லாம்
வாழ்வியல்
யதார்த்தம்

A.s.சுந்தரராஜன்
மானாமதுரை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%