ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.
அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.
ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Thanks and regards
A s Govinda rajan
சுண்டலின் மருத்துவ பயன்கள்
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் () போன்ற நோய்களைத் தடுக்க வல்லது.
முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ச ர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம்.
சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
Thanks and regards
A s Govinda rajan
கம்பின் மருத்துவப் பயன்கள்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்.
வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பு கால்சியம், இரும்பு, புரதம், மாவுச் சத்து நிறைந்தது. வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது.
மன அழுத்தத்தைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தும் சக்தி கம்புக்கு இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்பார்வை மற்றும் பாலியல் குறைபாடுகளுக்கும் இதில் மருந்து பொதிந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களிலே அதிக புரதச் சத்து நிறைந்தது கம்பு.
Thanks and regards
A s Govinda rajan
கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.
கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.
Thanks and regards
A s Govinda rajan
சோளத்தின் மருத்துவப் பயன்கள்
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.
உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.
சோளத்தில் செய்த உணவுகள் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது.
Thanks and regards
A s Govinda rajan
மக்காச்சோளத்தின் மருத்துவப் பயன்கள்
மக்காச்சோளம் உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும்.
அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.
மக்காச்சோளத்தில் வெளி உறை பகுதியில் அதிக அளவு நார்ச்சத்தும் எண்ணெய் சத்தும் உள்ளது. கருசூழ் தசைபகுதி அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.
Thanks and regards
A s Govinda rajan
சாமையின் மருத்துவப் பயன்கள்
நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் இருக்க பொpதும் பயன்படுகிறது.
மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலுக்கு இரத்தச்சோகை வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கியப் பங்கு வகிக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.
வயிற்று கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
Thanks and regards
A s Govinda rajan
தினையின் மருத்துவப் பயன்கள்
தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசியை உண்டாக்கும்.
ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் பி, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.
உடலில் வாதம் மிகுவதை போக்க தினை மாவு சிறந்த உணவாகும். இது வாயுவைப் போக்கி தச வாயுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் குணம் கொண்டது.
இது இனிப்பு சுவை கொண்டது. உடலை வலுவாக்கும். சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் இதற்கு உண்டு.
குழந்தை பெற்ற தாய்மார்கள் தினை மாவை கூழாக தயாரித்து குடித்தால், உடல் வலிமை பெறுவதுடன், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
கோதுமையின் மருத்துவப் பயன்கள்
முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொண்டால் குணமாகும்.
புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே குணமாகும்
கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துகள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
அதிகளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ள கோதுமை ரவை உடல் எடை குறைப்பதற்கு பயன்படுகிறது.
பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினை களைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது.
பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள சத்துகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.
பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது.
எள்ளின் மருத்துவ பயன்கள்
இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.
எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.
எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தௌpவடையும்.
எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.
உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai