*'மொக்க ஜோக்ஸ்*
"ஆபீஸ்ல இருந்து, 'டயர்டா' வந்தா என் மனைவி காபி போட்டு தருவா..."
"சோறு ஆக்க தெம்பு வேணுமே!"
😊 😄😊 😄😊
''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு சொல்றியே
,எப்படி ?''
''ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !''
😊 😄😊 😄😊
*கடி டைம்*
பதுங்கு குழிகளுக்கெல்லாம் மூடி போடச் சொல்றாரே மன்னர்?"
''எதிரி, 'ட்ரோன்' மூலமா கண்காணிக்க ஆரம்பித்து விட்டானாம்!”
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
உங்க பையன் வருங்காலத்துல பெரிய மெகா சீரியல் டைரக்டரா வருவான்
எப்படிச் சொல்றீங்க ?
பின்னே.. .
ஒரு வரியில பதில் சொல்லக் கூடிய கேள்விக்கெல்லாம் கூட
பத்து பக்கத்துக்கு விடை எழுதி வெச்சிருக்கானே
😊 😄😊 😄😊
ஒரு நாள் அதிகாலை. தூங்கிக் கொண்டிருந்த தனது மகனைப் படுக்கையிலிருந்து எழுப்பினார் அந்த அம்மா.
”எழுந்திரு மகனே. .. பள்ளிக்கூடம் போக நேரமாச்சு”
”முக்கல் முனகலோடு லேசாக கண்திறந்து பார்த்த மகன், ம்.. . எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை”
”சரி, ஏன் பள்ளிக்குப் போகப் பிடிக்கலை.. . ரெண்டு காரணம் சொல்லு ?”
”அதுவா.. . பசங்களுக்கும் என்னைப் பிடிக்கலை.. . வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலை. . போதுமா ?”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை.. .
எழுந்திரு. .. பள்ளிக்கூடம் டயம் ஆச்சு”
”சரி, பள்ளிக்கு நான் ஏன் போகணும்கிறதுக்கு நீங்க ரெண்டு காரணம் சொல்லுங்க ?”
”காரணமா.. .
ஒண்ணு, உனக்கு 52 வயசாச்சு. ..
ரெண்டு, நீ அந்தப் பள்ளிக்கு பிரின்ஸிபால்”
😊 😄😊 😄😊
*கடி டைம்*
''உங்க நண்பர் ஜானை ஏன்
'பாக்கி ஜான் 'னு சொல்றிங்க ?''
''கடனோ ,கைமாத்தோ வாங்கினா
முழுசா திருப்பித் தர மாட்டாரே !''
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
என்ன இது சாம்பார்ல
பிஸ்கெட் வாசனை வருது
உப்பு தீர்ந்து போச்சு. ..
அதனால
சால்ட் பிஸ்கட்
ரெண்டு போட்டேன்
😊 😄😊 😄😊
குருவே. .. என் இரண்டு சம்சாரத்தையும் என்னால சமாளிக்க முடியலை.
அதான் ஆசிரமத்துக்கு வந்துட்டேன்.
சிஷ்யா, 2 பொண்ணுங்களையே சமாளிக்க முடியாத நீ.
ஆசிரமத்துல இருக்கிற அத்தனை பொண்ணுங்களை எப்படி சமாளிக்கப்போறே ?
😊 😄😊 😄😊
*கடி டைம்*
ஒரு இருபது ரூபாய்
தர்மம் பண்ணுங்க சாமி.
அது என்னய்யா இருபது ரூபாய் கணக்கு ?
அர்ஜெண்ட்டா பிரவுஸிங் பண்ண வேண்டியிருக்கு சாமி.
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?