news Breaking News
clock

ஜாதகத்திற்கு பூஜை நடைபெறும் கோவில்

ஜாதகத்திற்கு பூஜை நடைபெறும் கோவில்



தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் உள்ள பெருங்குளத்தில் வழுதீஸ்வரர் கோவில் உள்ளது வளர்பிறை 

பிரதோஷத்தன்று பள்ளியறை பூஜையில் ஜாதக நகலை வைத்து வழிபட்டால் வேலை திருமணம் குழந்தை பேரு போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் 

இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் திருவழுதி பாண்டியன் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் முன்னோர் இவர் என்பார்கள் இவரால் கட்டப்பட்டது இந்த பழுத்தீஸ்வரர் கோவில் அம்பிகையின் பெயர் கோமதி அம்பிகை 


  அம்பிகை சன்னதியின் அர்த்த மண்டபத்தில் ஒரு மகரிஷியின் சிலை உள்ளது பட்டாபிஷேகத்தின் போது குல குருவிடம் செங்கோல் பெற்று மன்னர்கள் அரசாட்சியை ஏற்பது வழக்கம் அந்த வகையில் மன்னர்களுக்கு செங்கோல் வழங்கிய ஆதீனம் இங்கு உள்ளது கணபதி சண்முகர் தக்ஷிணாமூர்த்தி சப்த கன்னியர்கள் நடராஜர் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன இங்குள்ள விஷ்ணு துர்க்கையை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் ஊருக்கு அருகில் பெரியகுளம் இருப்பதால் இதற்கு பெருங்குளம் என பெயர் பெற்றது

பெருங்குளம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் 

தூத்துக்குடியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News