news Breaking News
clock

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

கோவை, ஆக. 9–


கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில், நாட்டின் 79-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதுதவிர, கண் அறுவைச் சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 7 வரை நடைபெறும் இலவச கண்பரிசோதனை முகாம் மூலம் பொதுமக்கள் கண் பராமரிப்பை இலவசமாக பெறும் வாய்ப்பை பெறலாம். இவற்றில் கண் மருத்துவப் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளில் 15 சதம் தள்ளுபடியும், லேசிக் சிகிச்சையில் 25 சதம் தள்ளுபடியும் மற்றும் ஆப்டிகல் பிரேம்களில் 25 சதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.


இந்த இலவச மருத்துவ முகாமில் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் மதுசூதன் ஆர்.ஜே., கார்னியா மற்றும் ஒளிவிலகல் நிபுணர் முகமது ஷாபாஸ், கண்புரை அறுவை நிபுணர் ஏ.எம்.மும்தாஜ், பொது கண் மருத்துவ நிபுணர் பானுலட்சுமி ஆகிய நிபுணர்கள் சேவையளிக்க உள்ளனர்.


கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை பொதுக் கண் பராமரிப்பு, கண்புரை, குளுகோமா, விழித்திரை, லேசிக், கார்னியா மற்றும் குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.


இந்த சுதந்திர தினத்தில் உங்கள் பார்வைக்கு சுதந்திரம் அளிக்கட்டும் என்ற குறிக்கோளுடன் இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்பதிவிற்காக 77369 05222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News