டி-20 உலகக்கோப்பையில் “மகாதேவ்” சூதாட்ட செயலி வாட்ஸ் அப், முகநூல் மூலம் செயல்படுவதாக குற்றச்சாட்டு

டி-20 உலகக்கோப்பையில் “மகாதேவ்” சூதாட்ட செயலி வாட்ஸ் அப், முகநூல் மூலம் செயல்படுவதாக குற்றச்சாட்டு



“மகாதேவ் (Mahadev Bett ing App)” என்பது ஆன்லைன் சூதாட்டத் தளமாகும். இதில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் மற்றும் பல்வேறு ‘கேசினோ’ விளையாட்டு களில் பணம் கட்டி விளையாட வழி வகை செய்யப்பட்டது. சவுரப் சந்திரா கர் மற்றும் ரவி உப்பல் ஆகியோரால் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமை யிடமாகக் கொண்டு இந்த செயலி இயக்கப்பட்டது. இந்த செயலி மூலம் ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம், சட்டவிரோத வழிகளில் வெளி நாடுகளுக்கு மாற்றப்பட்டதாக அம லாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும் மென்பொருள் மூலம் விளை யாட்டின் முடிவுகளை மாற்றி யமைத்து, மக்கள் பணத்தை இழக்கச் செய்யும் வகையில் இந்த செயலி வடி வமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மற்றும் “இந்தி யா” கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால், நவம்பர் 2023இல் ஒன்றிய மோடி அரசு மகாதேவ் செயலி உட்பட 22 சட்ட விரோத சூதாட்ட செயலிகளையும், ஜனவரி 2026இன் தொடக்கத்தில் கூட 242 சூதாட்டம் தொடர்பான இதர இணையதளங்களையும் அடுத்த டுத்து முடக்கியது. மோடியின் செயலாளர் குறிப்பாக, மகாதேவ் சூதாட்ட முறைகேட்டில் பிரதமர் அலுவல கத்திற்கு நேரடி தொடர்பு இருப்ப தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மோடியின் தனிச்செயலாளர் ஹீரன் ஜோஷி மகாதேவ் செயலியின் உரிமை யாளர்களுக்கும், அரசு அதிகாரிகளு க்கும் இடையே பாலமாகச் செயல் பட்டதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு களும் வெளியாகின. இதனால் ஹீரன் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகி உள்ளார். 2025 டிசம்பர் மாதம் முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. மீண்டும் இந்நிலையில், முடக்கப்பட்ட தாகக் கூறப்படும் மகாதேவ் சூதாட்ட செயலி தற்போது இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் செயல் பாட்டில் வலம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொபைல் ஆப் மூலமாக இல்லாமல் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம், மகாதேவ் சூதாட்ட செயலி செயல்பாட்டில் வலம் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி அரசு இதனை கண்டுகொள்ளா மல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%