என் ஆசையும் கனவெல்லாம் நீ என் வாழ்க்கை துணையானால்...
பாதங்களை தழுவும் அலை கடல் போல் உன்னைத் தழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே !
ரயில் பாதையை போல் இணைபிரியாமல் உன்னுடன் பயணித்துக் கொண்டிருப்பேன்....
கவிதை எழுதும் ஒவ்வொருவருக்கும் வர்ணிக்க ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது... எனக்கு நீ மட்டும் போதும் !
கைப்பேசியில் நான் உனக்கு அனுப்பிய கவிதைகளில் ஒற்றை டிக்கை கண்டு மனம் வருந்திய எனக்கு...
நீ என் கவிதைகளை வாசித்துவிட்ட இரண்டு நீலக்கோடுகளை காணும் போது .
என் கவிதைகளை. வாசிப்பது நீயானால்
என் ரத்தத்தால் கூட எழுதி அனுப்ப முடிவு செய்தேன் !
ஆனால்....என் கவிதைகளை வாசிக்கும் நீ அதை ரசிக்க மட்டுமே செய்கிறாய்...
என்று அறிந்தபோதுதான் இது ஒரு " டைம் பாஸ் ' காதல் என்பதை உணர்ந்து கொண்டேன் !
உனக்கு அனுப்பிய கவிதைகளை பத்திரிகைகளில் அனுப்பியிருந்தால் கூட என் கவிதை பிரசவித்திருக்கும்....
ஆனால் நீ என் காதலை கருவிலேயே கலைத்து விட்டாயடி !
----------------------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?