தனியார் நிறுவனம் மின்சாரம் தயாரிக்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்
Dec 29 2025
10
திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் லூர்துபார்சின் ராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் சிறப்புரையாற்றினார். இணை பொதுச் செயலாளர் நாராய ணமூர்த்தி, அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க கொடுத்த அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாது காக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணை பொதுச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?