news Breaking News
clock

தமிழகத்தில் சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 80 ஆயிரம் பேர் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழகத்தில் சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 80 ஆயிரம் பேர் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்



சென்னை, ஜன. -–


தமிழகத்தில் தீவிர சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.


இந்திய தேர்தல் கமிஷன் நிறுவப்பட்ட ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 16-வது தேசிய வாக்காளர் தினம் மாநில அளவில் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடைபெற்றது.


நிகழ்ச்சியில் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது:-


நாம் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு முக்கியமானது. இந்த ஆண்டு இந்திய தேர்தல் கமிஷனின் முழக்கமாக 'எனது இந்தியா எனது வாக்கு' என்றுள்ளதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி சிறந்த ஜனநாயகத்திற்கான நமது பங்களிப்பினை செலுத்திட வேண்டும்.


தற்போது, தமிழகத்தில் தீவிர சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.


 ழிப்புணர்வு வாகனம்


18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவங்களை நேரிலும், இணையதளத்தின் வாயிலாகவும் தேர்தல் கமிஷனின் செயலி வழியாகவும் சேர்த்திடலாம்.


இவ்வாறு அவர் பேசினார்.


இதையடுத்து, புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகளையும் வழங்கினார். பின்னர், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்விற்கான நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமாக ஜெ.குமரகுருபரன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை கலெக்டருமான ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News