news Breaking News
clock

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை:

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.


தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, கோவை மாவட்டம் உபாசி, சின்கோனா, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News