மதுரை மாவட்ட தமிழியக்கம் சார்பாக இன்று இந்திய மருத்துவ சங்க அரங்கில் பொங்கல் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். மதுரை மாவட்டத் தலைவர் மாரியப்பன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அல்அமீன் பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்நபி தொகுப்புரை வழங்கினார். விழாவிற்கு தலைமை மற்றும் சிறப்புரையாக விஐடி வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவருமான விசுவநாதன் கலந்து கொண்டு தமிழியக்கம் செய்யும் பணிகள் குறித்துப் பேசினார். பொங்கல் விழா இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். இதில் இளமனூர் அரசு மேனிலைப்பள்ளியின் மாணவர்கள் கிஷோர்க் கார்த்திக், ரெஜினா, பாலநந்தினி, இலட்ச்மி, மனிஷா பரிசுகள் பெற்றனர். இளனமனூர் பள்ளியின் தமிழாசிரியர் 'நல்லாசிரியர்' மகேந்திர பாபு எழுதிய நூல்களை விஐடி வேந்தர் விசுவநாதனிடம் வழங்கினார். கவியருவி அப்துல்காதர், பேரா.ரேவதி சுப்புலட்சுமி, சேதுகுமணன், சிதம்பரபாரதி, ஹாஜி முகமது இதிரிஷ், அபுதாகீர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் ஆசிரியர்கள் தௌபிக், தேவி, பெல்சியா, இலட்சுமி, ஆத்மநாதன் கலந்துகொண்டனர்.காளிமுத்து நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?