தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் சார்பாக சங்கடஹர சதுர்த்தி
Oct 10 2025
12

பரங்கிப்பேட்டை மெயின் ரோடு அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இன்று (10.10.2025) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் சார்பாக அதனுடைய வாசகர்களது பெயர் நட்சத்திரம் ராசி முதலியவற்றை சங்கல்பம் செய்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்விக்கப்பட்டது. கல்வி, தனம், தானியம், நீர் வளம் போன்றவை மேலோங்கி வளரவும், விவசாயம் செழிக்கவும், வாசக அன்பர்களின் குடும்பத்தில் கடன் பிரச்சனை, திருமண தடை தீரவும், குழந்தை பேறு வேண்டுவோருக்கு மழலை செல்வம் கிட்டவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரது அருளை பெற்றார்கள். பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைகளை சிவஸ்ரீ சிவகுமார் குருக்கள் செய்து வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?