தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு
Oct 17 2025
26

சென்னை,
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை (2025 முதல் 2029-ம் ஆண்டு வரை) ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நடத்தி, அதன் முடிவுகளை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் பார்வையாளர்களாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தருண் ககானி, தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெங்கடேஷ், தேர்தல் கமிட்டி உறுப்பினராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திர போஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
முக்கிய பொறுப்புகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அனைவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதன்படி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சேர்மனாக சீதாராமராவ், துணைத்தலைவர்களாக சோலை ராஜா, செந்தில் தியாகராஜன், ராமசுப்பிரமணி, பாலாஜி மரதபா, ராஜ் சத்யன், சைப்ரஸ் போஞ்சா, பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர்களாக தமிழ் செல்வன், சந்திரசேகரன், பொருளாளராக லதா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக ஹிதேன் ஜோஷி, சபியுல்லா, செல்வமணி, சஞ்சய் ஜெயராஜ், நெல்சன் சாமுவேல், ஜான்சன், அருணாசலம், மெய்யப்பன், லோகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 10-வது தோல்வி
புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 42-35 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ்அணியை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது. 16-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10-வது தோல்வியாகும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?