தலையெழுத்தையே மாற்றும் கீழக்கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்!*

தலையெழுத்தையே மாற்றும் கீழக்கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்!*



கும்பகோணம் அருகே அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம் பற்றித் தெரியுமா? இதோ அந்த ஆலயத்தின் சிறப்புகள்!


*🪷 அமைவிடம்:* கீழக்கொருக்கை (பட்டீஸ்வரம் அருகில்), தஞ்சாவூர் மாவட்டம்.


✨ ஆலயத்தின் தனிச்சிறப்புகள்:

🌟 அவிட்டம் நட்சத்திர தலம்: பிரம்மதேவருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்த தலம் இது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று அல்லது ஆவணி அவிட்டத்தன்று இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால், "தலையெழுத்தே மாறும்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!


🐂 அபூர்வ இரட்டை நந்தி: இங்கு சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரே உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமான காட்சியாகும்.


🙏 கோரக்க சித்தர் வரலாறு: தவறுதலாக ஒரு பெண்ணின் ஆடை பட்டதற்காக தன் கைகளையே வெட்டிக்கொண்ட கோரக்க சித்தர், இத்தல இறைவனை வணங்கி மீண்டும் கைகளைப் பெற்றார். (கொக்கை - கையற்ற நிலை; இதுவே மருவி 'கொருக்கை' ஆனது).


✍️ வேண்டுதலும் நேர்த்திக்கடனும்:

கல்விச் செல்வம்: குழந்தைகளின் கல்வி அறிவு வளரவும், ஞாபக சக்தி பெருகவும், மன உளைச்சல் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்வது சிறப்பு.


விசேஷ வழிபாடு: முந்திரிப்பருப்பு மற்றும் நிலக்கடலையை மாலையாகக் கட்டி, இங்குள்ள இரட்டை நந்திக்கு அணிவித்தால் நினைத்த காரியம் அப்படியே கைகூடும்! 🥜


திருமணத் தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை பெருகவும் பக்தர்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர்.


📖 கோயில் விபரங்கள்:


மூலவர்: பிரம்மஞான புரீஸ்வரர் (சுயம்பு லிங்கம்)


அம்மன்: புஷ்பவல்லி தாயார்


தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி


⏰ தரிசன நேரம்:


காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.


மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.


குறிப்பு: கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.


எம் அசோக்ராஜா __

அரவக்குறிச்சிப்பட்டி __

திருச்சி _620015__

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%