தலைவநாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்த நாள் விழா
Jan 03 2026
23
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267 - வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு,
வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,சமுதாய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் ஏராளமான பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று,பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மரியாதைசெலுத்தினர்.
கிராம பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
இதே போல் கீழராமநதி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,
பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் மேளதாளங்களுடன் வந்துபெருமாள் கோவில் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். பின்னர் சமுதாயகொடி ஏற்றி வைத்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை
விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில்
500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல்
பெரிய உடப்பங்குளம்,
கோவிலாங்குளம் பட்டி உடைகுளம் s.புதுப்பட்டி
உட்பட கமுதி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?