தாயாரின் வங்கி கணக்கில் கிரெடிட் ஆன பல டிரில்லியன் கோடி ரூபாய்: இளைஞர் அதிர்ச்சி
Aug 07 2025
21

உத்தர பிரதேசம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞரின் தாயார் வங்கிக் கணக்கில் பல லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது தாயாருக்கு கோடக் மகிந்திரா வங்கியில் கணக்கு இருந்துள்ளது. தாயார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மறைந்த நிலையில், தீபக் அவரது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது தாயாரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறுஞ்செய்தியைத் திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அதாவது, ஒரு டிரில்லியன் கோடி ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு தீபக் அதிர்ச்சியடைந்தார். இந்தத் தொகை அவரை உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக மாற்றும் அளவுக்கானது. தீபக்கிற்கு வந்த குறுஞ்செய்தியின்படி, அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299.
இது கற்பனைக்கும் எட்டாத மிகப்பெரிய தொகை. இதனால் பதறிப்போன தீபக், வங்கிக் கிளைக்குச் சென்றுள்ளார்.இதைக் கவனித்த வங்கி அதிகாரிகள், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். சாதாரண ஏழையின் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதேனும் பண மோசடி நடைபெற்றதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் இந்த விவகாரம் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரே நாளில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியை முந்திவிட்டார் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?