திங்கள்

திங்கள்



பூமியின் துணைக்கோள்

பொலிவுத் திங்களே

நாமும் பார்த்து

நலமாய் மகிழ்வமே!


வளர்பிறை தேய்பிறை

வண்ணமாய்க் காட்டும்

களிப்பினை நல்கிக்

கண்ணில் நிற்கும்!


அழகாய்க் காணும்

அன்பு நிலாவே

மழலை உணவை

மாண்பாய் உண்ணும்!


காதலர்க் குதவும்

கண்ணாம் நிலாவே

ஓது திங்களை

ஒண்மை யாக!


நிலவின் ஒருபக்கம்

நேர்ந்து பார்க்கலாம்

கலையாய்க் காணும்

தூரவே பார்த்தால்!


இலக்கியம் பாடும்

இனிய திங்களை

நலமுடன் பாடுவோம்

நாமும் நிலாவையே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%