news Breaking News
clock

திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பூமி பூஜை அமைச்சர் பங்கேற்பு

திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பூமி பூஜை அமைச்சர் பங்கேற்பு



கடலூர், பிப்.16-


திட்டக்குடி பகுதிகளில் நடைபெற உள்ள வளர்ச்சி பணிகளுக்கான பூமியின் பூஜையில் அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்றார். 


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் ஏரி வாய்க்கால் பகுதியில் 9.50 கொடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதற்கான பூஜைகளில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

 ரூ.18.08 கோடி மதிப்பீட்டில் 23 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News