news Breaking News
clock

தினகரன் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது!

தினகரன் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது!



அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் புதுக்கோட்டை, ஜன.

- அதிமுகவைப் பற்றி கடுமையாக விமர்சித்துவிட்டு, அதே கட்சியோடு டி.டி.வி.தினகரன் கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அதிமுக ஒரு பகுதியும், பாஜக ஒரு பகுதியுமாக இணைந்த கூட்டணிதானே தவிர, அது வலு வான கூட்டணி இல்லை. பலவீனமான கூட்டணிதான். அது எத்தனை கட்சிகளோடு வந்தாலும் இந்தியா கூட்டணியை யாரா லும் ஒன்றும் செய்ய முடியாது. வரும் தேர்தல் திமுகவுக்கு கடைசி சேர்தல் என்று அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி கூறுகிறார். 11 முறை தோல்வி யைச் சந்தித்த அவருக்கு 12 ஆவது தோல்வியை வரும் தேர்தல் தரும். அதிமுக வைப் பற்றி கடுமையாக விமர்சித்துவிட்டு அதே கட்சியோடு டி.டி.வி.தினகரன் கூட்டணி சேர்ந்திருப்பது வெட்கக் கேடானது’” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News