news Breaking News
clock

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு ‘‘கிராமி விருது’’

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு ‘‘கிராமி விருது’’



லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.–


திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு ‘‘கிராமி விருது’’ வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா (இரு முறை), மிட்செல் ஒபாமா மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் (மறைவிற்கு பின்) ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.


ஆண்டுதோறும் இசையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை கவுரப்படுத்தும் விதமாக, கிராமி விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதில், உலகின் முன்னணி பிரபலகங்கள் மிடுக்கான உடைமைகளை அணிந்து பங்கேற்றனர்.


இந்த நிகழ்ச்சியில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகப் பிரிவில் 'மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளக்ஷன்ஸ் ஆப் ஹி ஹோலினஸ் தி தலாய் லாமா' (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.


தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது கருதப்படுகிறது. தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூப்ஸ் மைன்ரெர் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.


இந்த விருது குறித்து தெரிவித்த தலாய் லாமா பேசுகையில், ‘இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இதை நான் தனிப்பட்ட சாதனையாகப் பார்க்கவில்லை. மாறாக, நம் அனைவருக்கும் இருக்கும் உலகளாவிய பொறுப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். அமைதி, கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இதனை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த விருது உதவும் என்று நான் நம்புகிறேன்’. என்றார்.


யார் யாருக்கு விருது?


கிராம விருது வென்றவர்களின் பட்டியல்:


சிறந்த ஆல்பம்: Debi Tirar Mas Fotos - – பேட் பண்ணி


சிறந்த பதிவு: Luther - கென்ட்ரிக் லாமர்


சிறந்த பாடல்: Wildflower –- பில்லி எலிஷ்


சிறந்த அறிமுக நட்சத்திரம் – ஒலிவியா டீன்


பாப் மற்றும் ராக் சிறந்த பாப் குரல் ஆல்பம்: MAYHEM –- லேடி காகா


சிறந்த பாப் தனிநபர்ருக்கான விருது: Messy –- லோலா யங்


சிறந்த பாப் டுயட்/குழுவுக்கான விருது: Defying Gravity – - சிந்தியா எரிவோ மற்றும் அரியானா கிராண்டே


சிறந்த ராக் ஆல்பம்


சிறந்த ராக் ஆல்பம்: NEVER ENOUGH –- டர்ன்ஸ்டைல்


சிறந்த ஆல்பர்நேட்டிவ் மியூசிக் ஆல்பம்: Songs Of A Lost World - தி கியூர்


சிறந்த ராப் ஆல்பம்: GNX –- கென்ட்ரிக் லாமர்


சிறந்த ராப் பாடல்: tv off –- ஜாக் ஆண்டனி, கென்ட்ரிச் லாமர் மற்றும் குழுவினர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News