news Breaking News
clock

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மகாலெட்சுமி நர்சரி பிரைமரி பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு விழா

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற  மயிலாடுதுறை மகாலெட்சுமி நர்சரி பிரைமரி பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு விழா


மயிலாடுதுறை , பிப் , 08 -

தமிழ்நாடு தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் பள்ளிக் குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சீர்காழி அருகே உள்ள பூம்புகார் மேலையூர் ஸ்ரீ முத்தையா நர்சரி பள்ளியில் நடைபெற்றது.  

45 பள்ளிக் குழந்தைகள் வகுப்பு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை மகாலெட்சுமி நர்சரி பள்ளி குழந்தைகள் சிறப்பாக பங்கேற்று இரண்டாம் வகுப்பு மாணவி செல்வி 

ஏ.வி.சாய் இனியாள் மாவட்ட அளவில் மூன்றாவது பரிசையும் ( 175 குறள்).மற்றும் ஐந்தாவது வகுப்பு மாணவி செல்வி வி.திலகரத்ணா இரண்டாவது பரிசு ( 209 குறள் ) தட்டிச்சென்றனர்.

 இவர்களது திறமையை பாராட்டி மாயூரம் லயன்ஸ் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி தாளாளர் ஹேமா வீரமணி வரவேற்க, லயன்ஸ் மாவட்ட தலைவர் வி.சிவசங்கரன் தலைமை தாங்க லயன் கே.பத்பனாபன் பரிசுகள் வழங்க லயன் கவிஞர் எஸ்.இராதாகிருஷ்ணன்சிறப்புரை ஆற்றினார் .

 மாயூரம் லயன்ஸ் சங்க பொருளாளர் லயன் கே.இளங்கோவன் நன்றி கூறினார்.

பள்ளி குழந்தைகள் அவர்களது புகைப்படத்துடன் கூடிய ஷீல்ட் வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற குழந்தைகள் இருவருக்கும் திருக்குறள் வித்தகி என்ற பட்டம் அளிக்கப்பட்டது. 

விழாவில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News