திருச்சி முகாமில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி திரும்பிய காமாட்சி அம்மன் கோயில் யானைகள்

திருச்சி முகாமில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி திரும்பிய காமாட்சி அம்மன் கோயில் யானைகள்


 

காஞ்சிபுரம்: ​திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்​கப்​பட்டு வந்த காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான 3 பெண் யானைகள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மீண்​டும் காஞ்​சிபுரம் கொண்டு வரப்​பட்டு சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் நேற்று முன்​தினம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அந்த யானை​களுக்கு பூஜைகள் நடை​பெற்​றன.


காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்கு சொந்​த​மான சந்​தி​யா, இந்​து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்​தால் பராமரிக்​கப்​பட்டு வந்​தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்​து​வச் சிகிச்​சை, கூடு​தல் பராமரிப்​புக்​காக திருச்சி எம்​.ஆர். பாளை​யத்​தில் உள்ள வனத்​துறை யானை​கள் முகா​முக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.


நீதி​மன்ற உத்​திர​வைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, இந்த யானை​களை மீண்​டும் சங்கர மடத்​திடம் ஒப்​படைக்க வனத்​துறை முடிவு செய்​தது.


அதன்​படி நேற்று காஞ்​சிபுரத்​தில் சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் இந்த யானைகள் ஒப்​படைக்​கப்​பட்​டன. இதனைத் தொடர்ந்து இந்த யானைகள்கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கஜசாலைக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.


தற்​போது அந்த யானைப் பண்​ணை​யில் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அங்கு யானை​களுக்​கான சிறப்பு பூஜைகளை நடத்த நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது. சுமார் 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு காமாட்சி அம்​மன் கோயில் யானைகள் காஞ்​சிபுரம் திரும்​பி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%