திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம்
Aug 22 2025
13

ஹைதராபாத்:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஜெகன் ஆட்சியில் திருமலையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேருக்கு ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் ஓட்டல்களை ஒதுக்கி உள்ளோம்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன நேரத்தை மாற்றி உள்ளோம். காலையில் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும்.
ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் தரிசனம், பிரசாத விற்பனை தொடர்பாக சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திருமலையில் சைபர் செக்யூரிட்டி லேப் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?